உறியடி திருவிழா
கோத்தகிரி அருகே உள்ள படுகர் இன மக்கள் வாழும் கிராமங்களில் ஆண்டு தோறும் பாரம்பரியம் மாறாமல் கிருஷ்ணர் கோயில்களில் உறியடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்நிலையில் இந்த ஆண்டு கோத்தகிரி அருகே திம்பட்டி கிராமங்களில் உள்ள கிருஷ்ணர் கோயில்களில் உறியடி திருவிழா ஆனந்தமாகவும், ஆன்மீக உற்சாகத்துடனும் நடைபெற்றது.இந்நிகழ்வில் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.பின்னர் உறியடி நிகழ்ச்சி நடைபெற்று, கிராமம் முழுவதும் சாமி ஊர்வலம் நடைபெற்றது.இதில் படுகர் இன மக்கள் அனைவரும் கலந்து கொண்டு பாரம்பரியம் மாறாமல் விழாவை சிறப்பித்தனர்.


