கோத்தகிரி பகுதியில் வசித்து வரும் கோத்தர் பழங்குடியின மக்கள், ‘நேரு பூங்கா தங்களுக்கு சொந்தம்,’ என, கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக, கடைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.பூங்காவில் அனுமதி இல்லாமல், வானுயர்ந்த சோலை மரங்களை வெட்டி, மண்ணை அகற்றி விதிமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.தற்போது, மூன்று கடைகள் முழுமையாக அமைத்து வியாபாரம் நடந்து வரும் நிலையில், பல கடைகள் அமைப்பு தற்கான பணிகள் நடந்து வந்தன. இது தொடர்பாக, நகராட்சி நிர்வாகம்,காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, இது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில், ‘கடைகள் அமைக்க கூடாது,’ என, கூறியதை அடுத்து, சில நாட்கள் பணி நடைபெறவில்லை. தொடர்ந்து, அப்பகுதியில் அனுமதி இல்லாமல் கடைகள் அமைக்கும் நடைபெற்று வந்ததுநகராட்சி கமிஷனர் ஜெயகுருநாதன் அளித்த புகாரின்படி, 15 பேர் மீது, கோத்தகிரி காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், அந்த கடைகளை உடனே அகற்றி காலி செய்ய வேண்டும்,’ என, அறிவித்து, மூன்று கடைகளில் நகராட்சி சார்பில் நோட்டீஸ் நேற்ற ஒட்டப்பட்டது.அந்த நோட்டீஸில்,’ தங்களோடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் படி, நகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கிடைக்கப்பெற்ற, 24 மணி நேரத்திற்குள் ஆக்கிரமிப்பை தங்களாகவே அப்புறப்படுத்தி கொள்ள வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற தவறினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். 128 (2) படி, தங்கள் மீது, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். மேலும், நகராட்சி பணியாளர்களை வைத்து கடைகளை அப்புறப்படுத்துவதுடன், அதற்கான ஏற்படும் அனைத்து செலவுகளும் தங்களிடம் இருந்து வசூல் செய்யப்படும்,’ என, கூறப்பட்ட நிலையில் இன்று கோத்தகிரிநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜேசிபி வாகனத்தை கொண்டு அகற்ற வந்தனர் அப்போது கோத்தர் இன மக்கள் பாரம்பரிய உடை அணிந்து வந்து எதிர்ப்பு தெரிவித்தனர் இதனால் போலீசாருக்கும் கோத்தர் மக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது இதனால் கோத்தகிரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது நாளை இந்த பிரச்சனை குறித்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வர உள்ளதால் நாளை வரை அனுமதி அளிக்கும்படி போலீசாரிடம் பழங்குடி மக்கள் கேட்டுக் கொண்டனர் அதுவரை அப்பகுதியில் பணி மேற்கொள்ளக் கூடாது என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது நிலையில் பழங்குடி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்