கோத்தகிரி லயன்ஸ் கிளப் சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் தனியார் அரங்கில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். இதில் பொது மக்களுக்கு தையல் இயந்திரங்கள், Ai கண்ணாடிகள், பள்ளிகளுக்கு வாட்டர் டேங்க், விளையாட்டு பொருட்கள், தலைக்கவசம், அரசு மருத்துவமனைக்கு குடிநீர் இயந்திரம் என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் சிறப்பு விருந்தினர் ஜூட்ஸ் பள்ளி இயக்குனர் சம்ஜித், மற்றும் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
முன்னதாக செயலாளர் கோபிநாத் வரவேற்பு உரையாற்றினார் இறுதியில் பொருளாளர் ராஜ்மனோகரன் நன்றி தெரிவித்தார்.