November 28, 2026

உதகை அருகே உள்ள அட்டு பாயில் கிராமத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகள் சேகரிக்கும் மையம் கிராம மக்களின் ஒத்துழைப்போடு மாற்று இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் கோட்டாட்சியர் அரவிந்த் தெரிவித்தார் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை புரிந்த சட்டமன்ற உறுப்பினர் போஜராஜன் மாவட்ட பாஜக தலைவர் தர்மன் மாநில செயற்குழு உறுப்பினர் மோகன்ராஜ் சிறு தேயிலை விவசாயிகள் சங்கத் தலைவர் ஜே பி சுப்ரமணியம் முன்னிலையில் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று வனவிலங்கு அச்சுறுத்தல் உள்ள இடம் என்பதாலும் நூலகம்,பால் உற்பத்தியாளர் சங்கம், பேருந்து நிலையம் உள்ள இடத்தை ஒட்டி இந்த திடக்கழிவு மேலாண் மையம் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி சமூக தீர்வு எட்டப்படும் என கிராம மக்களுக்கு உறுதி அளித்தார்.