November 23, 2026

பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் இலவச கண் கண்ணாடிகள் வழங்கும் முகாம் நடைபெற்றது.கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் கொளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியோர் இணைந்து நடத்திய முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் லவ்ரா முன்னிலை வகித்தார்.நீலகிரி மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும் உதகை அரசு மருத்துவக் கல்லூரி கண் மருத்துவ குழுவினர், மருத்துவர்கள் விஜயஸ்ரீ, திலீப் தலைமையில் கண் தொழில்நுட்புணர்கள் அடங்கிய குழுவினர், கிட்டப்பார்வை, தூரப்பார்வை மற்றும் கண் சம்பந்தமான பரிசோதனைகளை மேற்கொண்டனர்.கொளப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலைய பல்நோக்கு செவிலியர்கள் கயல்விழி, நந்தினி, சுகாதார ஆய்வாளர்கள் கௌரிசங்கர், திகாஸ், ஆஷா பணியாளர்கள் சகிலா, சௌமியா உள்ளிட்ட குழுவினர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்த சர்க்கரை பரிசோதனைகளை மேற்கொண்டனர். முகாமில் பொதுமக்கள் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.இதில் 15 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு உதகை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், 10 பேர் கண் அழுத்தம் சிகிச்சைக்கும் பரிந்துரை செய்யப்பட்டனர். 50 பேருக்கு கிட்டப்பார்வை பாதிப்பு உடையவர்களுக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது. குழந்தைகளை கண் பார்வை குறைபாடுகளும் கண்டறியப்பட்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. தேவை உள்ளவர்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.முகாமிற்கான ஏற்பாடுகளை கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் நிர்வாகிகள் உட்பட பலர் செய்திருந்தனர்.