மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி:கோத்தகிரி அணி வெற்றி

நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் முரளிபாபு சுழற் கோப்பைக்கான மாவட்ட அளவிலான ஏ டிவிஷன் லீக் போட்டிகள் ஊட்டி மற்றும் கோத்தகிரியில் நடைபெற்று வருகிறது. இந்த போட் டியில் மாவட்டம் முழுவதும் இருந்து மொத்தம் 10 அணிகள் பங் கேற்று விளையாடுகின்றன. இந்தநிலையில் கோத்தகிரி காந்தி மைதானத்தில் ஏ டிவிஷன் லீக் போட்டி நடைபெற்றது. இதில் கோத்தகிரி புளூ மவுண்டன் கிரிக்கெட் அணி மற்றும் குன்னூர் யங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் அணிகள் பங்கேற்று விளை யாடின. தலா 35 ஓவர்கள் கொண்ட போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கோத்தகிரி புளூ மவுண்டன் கிரிக்கெட் அணி நிர்ணயிக் கப்பட்ட 35 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத் தது. இந்த அணி வீரர்கள் ஜானகி ராமன் 63 ரன்கள், கிஷோர் குமார் 27 ரன்கள் எடுத்தனர். குன்னூர் யங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர்கள் யதுஷ் போஸ் மற்றும் ஜனார்த் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடர்ந்து 210 பந்துகளில் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குன்னூர் யங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் அணி 26.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்த அணி வீரர்கள் அயான் மேத்யூஸ் மற்றும் தர்ஷன் ஆகியோர் தலா 40 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் 19 ரன்கள் வித்தியாசத்தில் கோத்தகிரி புளூ மவுண் டன் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது.

Categories:Uncategorized