நீலகிரி மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் கோத்தகிரி காந்தி மைதானத்தில் மாவட்ட அளவிலான சி டிவிஷன் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நடைபெற்ற ‘சி ‘ டிவிஷன் பிரிவு முதல் போட்டியில் கோத்தகிரி புல்சன் மற்றும் யூனியன் கிளப் அணிகள் பங்கேற்று விளையாடின. இரு அணிகளும் சமபலத்துடன் விளையாடியதால் போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. இதில் புல்சன் அணி 3 -0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது
